2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கல்வி உரிமையை பாதுகாக்க சமூக விழிப்புணர்வூட்டல்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்  

வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பது தொடர்பான சமூக விழிப்புணர்வூட்டும் பேரணி, கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இன்று (23) காலை ஆரம்பித்து, கல்முனை நகரில் முன்னெடுக்கப்பட்டது. 

கல்முனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை நவஜீவன நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.டி.பத்மகைலநாதன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தி, வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. 

இதேவேளை, வீதியால் சென்ற வாகனங்களில் விழிப்புணர்வூட்டல் ஸ்டிக்கர்களும் கலந்துகொண்ட அதிதிகளால் ஒட்டப்பட்டன.

நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.அமலநாதன், சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முர்ஸித், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டில்லி மலர் சுபாஸ்கரன் மற்றும்   பிரதேச மட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .