Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.என்.எம்.அப்ராஸ், எம்.ஏ.றமீஸ், நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான்
சம்பள முரண்பாடுகள், ஊழியர் நலன்கள் தொடர்பில் உரிய தீர்வை வழங்கும் வரை, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று (10) முதல் தொடர் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
பல்கலைக்கழகப் பிரதான நுளைவாயிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்பில் அதிகளவிலான ஊழியர்கள் கலந்துகொண்டு, வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு, அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி வரை பேரணியாகவும் சென்றனர்.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க சம்மேளனம், பல்கலைக்கழகங்களின் கூட்டுக்குழுவும் இணைந்து, தங்களது ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய நலன்கள் தொடர்பில் ஏற்பாடு செய்த தொழில் சங்க நடவடிக்கையின் பொருட்டு, தென் கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்கமும் இணைந்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
கல்விசாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு நடைமுறையைச் சரியானதாகத் தயாரித்துக் கொள்ளல், ஊழியர் எண்ணிக்கை அறிக்கையைச் சரியானதாகத் தயாரித்துக் கொள்ளல் போன்ற 11 முக்கிய கோரிக்கைகளினை முன்வைத்து உரிய தீர்வை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி கோரிக்கைகள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர் உட்பட உயர் மட்டங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago