2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்வி மேம்பாட்டுக்கு சமுர்த்தி உதவி

வி.சுகிர்தகுமார்   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கு அமைய,  சமுர்த்தி வங்கிகளும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தேசிய ரீதியில் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படைக்கணக்கில் புகைத்தலை ஒழித்தல் கொடி விற்பனை மூலம் சேமிக்கப்பட்ட நிதியில், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலுக்கமைய ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கிச்சங்க  முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் சமுர்த்தி வங்கியில் இன்று(02) நடைபெற்றது.

இதன்போது, சைக்கிள்களும் வீடமைப்புக்குத் தேவையான தகரங்களும்  கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X