2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், நாளை மறுதினம் (10) முதல் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரென, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இருந்து வரும் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர்களால் தீர்வுகள் வழங்கப்படாததால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஓகஸ்ட் 28, 29ஆம் திகதிகளில் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்ததை மேற்கொண்டதுடன், 29ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சுக்கும் முன்னால் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதாகவும், அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் பி.எச். தம்பிக்க பிரியந்த தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய நாடெங்கிலுமுள்ள சுமார் 16 ஆயிரம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடரான பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X