2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் அதிபர் தரம் Iஐ சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை செல்வராசா, தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து நாளை (02) ஓய்வுபெறுகின்றார்.

அம்பாறை, நாவிதன்வெளியைப் பிறப்பிடமாகவும் நற்பட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், 1984 ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று, பதுளை - மடுல்சீம மகா வித்தியாலயத்தில் கடைமையாற்றி, தெகிகல தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்ப கல்வியை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையிலும் பின்னர் ஸ்ரீ ஜெயவத்தனபுர மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விஞ்ஞான மாணி வியாபார நிர்வாகத்துறையில் சிறப்புப்பட்டமும் பெற்றுள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் 1994ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் யாழ். பல்கலைக்கழகத்தில் 2005ஆம்  ஆண்டு கல்வி முதுமாணிப்பட்டம் பெற்றதுடன், 2017ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை வழிகாட்டல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன், தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான கல்முனைப் பிராந்தியத்துக்கான போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 2009 நடைபெற்ற இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .