2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 11 நாள்களாக தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள்,  இன்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பிரதான வீதி வரை சென்று, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு, சம்மந்தப்பட்ட தரப்பினர்களால் தீர்வுகள் வழங்கப்படாததால் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டதாக  கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.

'கல்விசாரா ஊழியர் என்ற பதத்தை மாற்றுதல்', '2020 ஜனவரியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க தேவையான சுற்று நிரூபத்தை வெளியிடல்', '45 சதவீத மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவை 75 சதவீதம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை', 'பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தைப் பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல்', 'நிறுத்திவைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிடல்', 'பொதுக் காப்புறுதி முறையொன்றை நடைமுறைப்படுத்தல்', 'கொடுப்பனவுகள், சகல கடன் எல்லைகளையும் அதிகரித்தல்', 'ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு முறைகளை சரியானதாக தயாரித்துக் கொள்ளுதல்'  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே  பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (10) முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக,  தலைவர் எம்.எம். நௌபர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் கல்விசாரா ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக நிருவாகத்தினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X