Janu / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமகிபுர பகுதியில் இருந்து யானையொன்றின் சடலம் ஞாயிற்றுக்கிழமை(26) அன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள சோளம் உற்பத்தி செய்யும் விவசாயக் காணியில் விழுந்து யானை இறந்தமை தொடர்பான விசாரணைகளை வனவிலங்கு கால்நடை பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த காட்டு யானையின் முன் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மிகவும் சிரமத்துடன் நடந்து வந்ததாகவும் பின்னர் இரண்டு நாட்கள் அம்பாறை வனவிலங்கு கால்நடை பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்ப குமார தலைமையிலான குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையிலேயே குறித்த யானை கடந்த சனிக்கிழமை(25) மாலை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago