2025 மே 12, திங்கட்கிழமை

காட்டு யானைகள் பிடிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு, வேறு இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரு காட்டு யானைகள், நேற்று (07) நள்ளிரவு பிடிக்கப்பட்டு,கனரக வாகனங்களின் உதவியுடன் இவ்வாறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்காக   வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த  நடவடிக்கை, தோல்வியடைந்திருந்தது.

தற்போது  சுமார் 35 க்கும் அதிகளவான யானைகள், மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து அண்மைக்காலமாக பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றன.

குறிப்பாக நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, உகண,  தமண பிரதேச செயலாளர்  பகுதிகளில்  குறித்த யானைகள்  நடமாடி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X