Editorial / 2018 ஜூலை 03 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா, நடராஜன் ஹரன்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவுக்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், இன்று(03) தெரிவித்தார்.
இதற்கமைய, நாளை (04) புதன்கிழமை காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு, மீண்டும் 22ஆம் திகதி மூடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம் தொடர்பிலான இறுதிக் கூட்டம், உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (02) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கதிர்காமம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் உற்சவம், எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளன.
காட்டுப்பாதை, ஜூலை மாதம் 24ஆம் திகதி மூடப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026