2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் கிட்டியது

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூறுள்  ஹுதா உமர், சகா

செப்டெம்பர் 18ஆம் தியதியன்று காணாமல் போன சாய்ந்தமருது, மாளிகைகாடு, காரைதீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும், திருகோணமலையிலிருந்து 154 கிலோமீட்டர் தூரத்தில், இந்தியக் கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தப் படகு, கடற்றொழில் அமைச்சின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு, சட்டலைட் ஊடாக இனங்காணப்பட்டதாகவும் தங்காலை பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள், படகையும் மீனவர்களையும் கரைக்குக் கொண்டு வருவதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மீனவர்களை, ஊருக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை, மீனவச் சங்கங்கள் முன்னேடுத்து வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X