Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 12 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், திங்கட்கிழமை நண்பகல் (10) காணாமல் போன பெண், அவரது வீட்டின் குளியல் அறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விநாயகபுரம் 02, பாடசாலை வீதியைச் சேர்ந்த, வெற்றிவேல் கனகம்மா (மலர்) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படிப் பெண்ணைக் காணவில்லை என்று, அவரது கணவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அப்பெண்ணினது வீட்டுக்குப் பின்புறமாகக் கட்டப்பட்டுக் கிடந்த குளியல் அறையில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலத்தின் முகத்தில் இரத்தக் கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .