எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொன்னன்வெளிகண்ட மக்களுக்குச் சொந்தமான காணிக்கு மாற்றுக் காணிகள், நட்டஈடுகள் வழங்குமாறு, காணியுரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுடீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (09) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒலுவில் - பொன்னன்வெளிகண்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணி, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்தவர்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 75 குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்காணியை இழந்தவர்களுக்கு, மாற்றுக் காணி வழங்குவதற்கு ஒலுவில் பாலையடிவட்டை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் இவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அம் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒலுவில் அஷ்ரப் நகரில் 69 விவசாயக் குடும்பங்களுக்கான காணிகளும், அம்பலம் ஓயா பிரதேசத்தில் 750 ஏக்கர் விவசாயக் காணியும், ஆலையடிவேம்பு பாவா புரத்தில் 96 ஏக்கரும், பொத்துவில் வேகாமத்தில் 450 ஏக்கரும், கிரான்கோவை பாலையடி வட்டையில் 503 ஏக்கர் நெற் காணியும், கிரான் கோமாரியில் 177 ஏக்கர் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த, விவசாயக் காணிகளை மீட்டு உரியவர்களுக்கு வழங்குவதற்கு ஆவணம் செய்வதோடு, இவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026