Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத் தருமாறு அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக சுவரொட்டிகள் ஒட்டும் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தலைவர் பி. கைறுடீன், இன்று (18) தெரிவித்தார்.
“நிலப்பறிப்பு - இது எமது இருப்பின் மறுப்பு” எனும் வாசகம் அடங்கிய சுவரொட்டிகள், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒட்டப்படுமெனவும் இதனூடாக பொதுமக்களை விழிப்படையச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
ஒலுவில் - பொன்னன்வெளி கண்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான 600 ஏக்கர் காணியும், ஒலுவில் - அஷ்ரப் நகர் 69 விவசாயக் குடும்பங்களுக்கான காணிகளும், அம்பலம் ஓயா பிரதேசத்தில் 750 ஏக்கர் விவசாயக் காணிகளும், ஆலையடிவேம்பு - பாவாபுரத்தில் 96 ஏக்கர் காணிகளும், பொத்துவில் - வேகாமத்தில் 450 ஏக்கர் காணிகளும், கிரான்கோவை பாலையடி வட்டை 503 ஏக்கர் நெற் காணிகளும், கிரான் கோமாரியில் 177 ஏக்கர் காணிகளும், நீத்தை கரும்புக் காணி, நுரைச்சோலை வீட்டுத் திட்டம், பாணாமை பற்று, கோமாரி மஜீத் புரம், கனகர் கிராமம், நாவலடி வட்டை, கட்சேனை, அம்பலத்தாறு கண்டம் உட்பட 39 பிரதேசங்களில் சுமார் 14,127 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வனப் பாதுகாப்பு, வன விலங்குப் பாதுகாப்பு, இராணுவ முகாம், புனித பூமி, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கென எடுக்கப்பட்ட விவசாயக் காணிகளை மீள வழங்க வேண்மெனவும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago