2025 மே 12, திங்கட்கிழமை

‘காணிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், ஜனாதிபதி வேட்பாளராக உள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் முன்வைத்தபோது, தனது வெற்றியின் பின்னர் ஆறு மாத காலத்துக்குள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என, இவ்விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளார் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு, கல்முனையில் அமைந்துள்ள அவரது மக்கள் பணிமனையில் நேற்று (13) நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவு, எந்தவொரு வகையிலும் ஜனாதிபதித் தேர்தலில் சிறியளவான தாக்கத்தைக்கூட ஏற்படுத்தாதெனவும் ஆண்டாண்டு காலம் கொழும்பு நகரின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி வசப்படுத்தியுள்ளமை போன்றே எல்பிட்டி பிரதேச சபை ஆட்சியுமென்றார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் மக்கள் மிகுந்த சாதூரியத்துடன் நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக சிலர் முஸ்லிம் மக்களை வேறு திசைக்கு திருப்புகின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.

அரசியல் பலத்தை வைத்தே எமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அரசியல் பலம் இழந்து, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அணியில் இருந்து கொள்வதில் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித நன்மைகளும் கிட்டிவிடப் போவதில்லையெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X