எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 14 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான களியோடை வத்தைக் காணியை குடியிருப்பதற்கு வழங்குமாறு கோரி, பொதுமக்கள், இன்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சுலோபங்களை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
தரிசு நிலமாக பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள அரச காணியை குடியிருப்பதற்கு பகிர்ந்து தருமாறும், அங்கு தற்காலிகமாகக் குடியிருப்பவர்களை அகற்றாமல் இருப்பதற்கு ஆவண செய்யுமாறும், அக்காணியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கி, மீதமாகவுள்ள காணியை குடியிருப்பதற்கு வழங்குமாறு கோரியே, இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குடியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026