2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காரைதீவில் சிகை அலங்கார நிலையங்களுக்கு தடை

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

காரைதீவு பிரதேச செயலக கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 5ஆவது கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்  தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.

இதன்போது covid 19 வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணும் முகமாக சலூன் கடை திறந்து முடி வெட்டுதல், வீடுகளுக்கு சென்று முடி வெட்டுதல் ஆகியன மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடைசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீறும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து மாளிகைக்காடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பதிவுசெய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வாடிகளுக்கு மாத்திரம் மொத்த வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதுடன், அவர்களுக்கான மீன்களை பதனிடும் ஐஸ், உப்பு போன்றவைகளை வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அனுமதி வழங்குவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X