Editorial / 2019 நவம்பர் 26 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
காரைதீவு பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் 21ஆவது மாதாந்த அமர்வு, சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.
முன்னதாக, வரவு- செலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்காக வெளியில் தேசிய மாகாண சபைக்கொடிகள் ஏற்றப்பட்டன. பின்னர் சபைக்கூட்டத்தின்போது வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் உரையாற்ற தவிசாளர் நேரம் வழங்கினார்.
அதற்கிணங்க, சபையிலுள்ள 11 உறுப்பினர்களும் வரவு - செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக உரையாற்றினர். இறுதியில் தவிசாளரும் உரையாற்றி, ஏகமனதாக நிறைவேற்றினர்.
தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அத்துடன், இவர்கள் சிறுபான்மையினத்தவரையும் அரவணைத்து இன, மத பேதமின்றி ஆட்சி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும், மாவடிப்பள்ளியில் ஏற்கெனவே மடுவம் இருந்த இடத்தில் இறைச்சிக்கடை கட்டுவதற்கு விலைமனுக் கோரப்பட்டிருப்பதால் கடை கட்டுவது தொடர்பில் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்யுமாறு, விசேடபிரேரணையை உறுப்பினர் எம்.ஜலீல் கொண்டுவந்தார்.
அது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில்பகிரங்க வாக்கெடுப்பின்போது, கடைகட்டப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026