Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 25 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் மாலை யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளை யானை காவலுக்காக நின்ற ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க முஹமட் அலியார் சுபையிர் மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ள 29 வயதையுடையவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago