Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட வெள்ள நீரால் வேளாண்மையை அறுவடை செய்வதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அயராத முயற்சி காரணமாக, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் சேனைக்குடியிருப்பு கிட்டங்கி, இராட்சத இயந்திர பம்பிகள் இயங்க ஆரம்பித்துள்ளதுடன், வெள்ள நீரும் வற்ற ஆரம்பித்துள்ளது.
இன்று (01) இயந்திரம் இயங்க ஆரம்பித்துள்ளமையால், மதகுகளை மறித்து, மண் மூட்டைகள் கடின தகடுகள் கொண்டு அணை போடப்பட்டு, வயல்வெளிகளில் உள்ள நீர் மட்டக்களப்பு வாவிக்கு அனுப்பும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸனின் துரித முயற்சியின் பலனாக விவசாயிகளின் வெள்ள நீர்ப் பிரச்சினைக்கு குறித்த நீர் இறைக்கும் பம்பிகளின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்கும் அவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, நீர் இறைக்கும் குறித்த இராட்சத பம்பியைப் பாவிக்கும் போது அதிகமாக மின் கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டி செலுத்த வேண்டி வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026