Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில், இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கிய வரும் கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பாலமுனை அல்-அஸ்லம் இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ. அத்ஹம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளிநாட்டு உறவுகள் மற்றும் திறன் அபிவிருத்தி, தொழில் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சியை பயில்வதற்கு அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர், காரைதீவு ஆகிய கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயிலுனர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலமுனை ஹூஸைனியா நகர் மீள்குடியேற்றத் திட்டத்தில் 16.05.1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் ஆள்கடல் மீன்பிடி வள்ளத்தின் வெளியியந்திரம் திருத்துதல், தச்சுத் தொழில், உருக்கி காச்சி ஒட்டுதல் மற்றும் வீட்டு மின்னினைப்பு, நீர்க்குழாய் பொருத்துதல் போன்ற பயிற்சி நெறிகள் இடம்பெற்று வந்த நிலையில் அவை மூடப்பட்டுள்ளது.
கடந்த 21 வருடங்களாக கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையம் மூடப்பட்டு அங்கிருந்த உபகரணங்களும், அகற்றப்பட்டுள்ளதோடு கட்டடத் தொகுதியும் பாழடைந்து காணப்படுகின்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழில் பயிற்சிகளை பயின்று வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி அதே கட்டடத்தில் கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்குமாறும், அல்லது புதிதாக வேறு இடத்தில் ஆரம்பித்துத் தருமாறும், அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025