Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு, கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகரசபை பிரிவுக்கு உட்பட்ட கல்முனை சுமத்ராராம விஹாரை வளாகம், பெரிய சந்தைத் தொகுதி, பஸ் நிலையம், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகள் போன்ற இடங்களில், சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் கிருமிநாசினி விசிறும் பணிகள், கட்டங்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின், சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ரஸாக் (ஜவாத்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப், உட்பட பொலிஸார் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த செயற்பாட்டுக்கு, கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன நன்றிகளை தெரிவித்தார்.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago