Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளால், கிளினிக் நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகள், தபால் திணைக்களத்தினுடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜே.எம்.ஜவாஹிர், இன்று (01) தெரிவித்தார்.
இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், கிளினிக் பதிவு உள்ள நோயாளர்கள், 067- 2052068 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக, தொடர்புகொண்டு கிளினிக் இலக்கம், பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அறியத்தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கிளினிக் பதிவு செய்துள்ள நோயாளர்கள், 067-2229261 எனும் தொலைபேசி இலக்கத்துக்கும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கிளினிக் பதிவு செய்துள்ள நோயாளர்கள் 067-2229496 எனும் தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொண்டு, தமது விவரங்களை அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் விசேடமாகத் திறக்கப்பட்டு முகவரி இடப்பட்டுள்ள கிளினிக் நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை, தபால் சேவகர்கள் விநியோகித்து வருகின்றனர் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
23 minute ago
2 hours ago