2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவும் கட்டடத் திறப்பு விழாவும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவும் குவைத் அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், சனிக்கிழமை (09) காலை வைபரீதியாக இடம்பெறவுள்ளன.

குவைத் அரசாங்கத்தின் 55 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி, அதிதிகளினால் வைபரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளதுடன், இக்கலூரியில் கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, சித்தியடைந்த 32 மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளன.

கல்லூரியின் முகாமைத்துவ சபையின் தவிசாளர் கலாநிதி அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக குவைத் நாட்டின் இலங்கைக்கான உயரிஸ்தானிகர் கலாப் பு தாஹிர், கௌரவ அதிதிகளாக சவூதி அரேபியா நாட்டின் இலங்கைக்கான உயரிஸ்தானிகர் அப்துல் நாஸர் எச்.அல் ஹாச், எகிப் நாட்டின் இலங்கைக்கான உயரிஸ்தானிகர் ஹூஷைன் அல்- சஹார்த்தி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X