2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’கிழக்கில் இதுவரை 2,500 அன்டீஜன் பரிசோதனைகள்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 2,500 அன்டீஜன் பரிசோதனைகளும் 7,000 பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன்  தெரிவித்தார்.

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “கொரோனா என்ற கட்டுப்பாட்டுக்காக, எமது பொருளாதாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது. பொதுமக்களின் பொருளாதாரமும் முக்கியமானது. இதனால் தான் அக்கரைப்பற்று பிராந்திய விவசாயிகளின் நலன் கருதி, அவர்கள் விவசாயத்தில் ஈடுபடும் வகையில், சுழற்சிமுறை  தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம். திங்கட்கிழமையில் (07) இருந்து கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை இடம்பெறும்” என்றார். 

இதை விட கிராம சேவகர் பிரிவுகளாக பிரித்து அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில் பகுதிகளில் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக, கிழக்கு ஆளுநரால் அம்பாறை மாவட்டத்தில்  மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடன் இணைந்து பரிந்துரைகளை முன்வைத்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன்படி, கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயத்தில் தரம் 10 முதல் 12 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரையை வழங்கியுள்ளதாகவும் இந்தப் பரிந்துரைக்கமைய  கிழக்கு மாகாண ஆளுநரால் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X