2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக அஸ்மி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

கடந்த காலங்களில் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக பதவிவகித்த இலங்கை நிர்வாக சேவை (தரம் 01) அதிகாரி ஏ.எல். முஹம்மத் அஸ்மி, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம் லெப்பையின் புதல்வரான இவர், தனது ஆரம்ப கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியிலும், கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும், கற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத் துறையில் இளமானிப் பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .