Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) வருடாந்த ஒன்றுகூடலும் 2020ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும், ஒன்றியத்தின் பிரதித் தவிசாளர் ரீ.எம்.றிபாய் தலைமையில் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் ஒன்றிய சட்டத்துறை பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.ஏ .றஸாகின் அனுசரணையில் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு, ரீசேட்டுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெற்றது.
பொறியியலாளர் யு.கே.எம்.முஸாஜித் தவிசாளராகவும், யு.எல்.எம்.பைஸர் நிர்வாகப் பணிப்பாளராகவும், ஏ.பி. ஜிப்ரி நிதிப் பணிப்பாளராகவும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி திட்ட அமுலாக்கல் பணிப்பாளராகவும் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஊடகத்துறைப் பணிப்பாளராகவும் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ .றஸாக் சட்டத்துறைப் பணிப்பாளராகவும் ரீ.எம்.றிபாய் உதவி தவிசாளராகவும் எம்.எம்.ஏ.முபாறக், உதவி நிர்வாக பணிப்பாளராகவும் ஏ.எம்.பைஸர், உதவி நிதிப் பணிப்பாளராகவும் எஸ்.எம்.பஸீர், உதவித்திட்ட அமுலாக்கல் பணிப்பாளராகவும் யு.கே.காலிதீன், ஏ.எல்.எம்.சலீம், எம்.ஏ.றபீக் , ஏ.ஜீ.ஏ.ஜாபீர், ஏ.எல்.எம்.நாபித், அல் - அமீன், இஸட் .ஏ.ஜின்னா ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
10 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
35 minute ago