Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 ஜூலை 08 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணத்தை முன்னேற்றகரமாக கட்டியெழுப்பவேண்டுமென தெரிவித்த, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட ஆளுநர்,தலைசிறந்த ஒரு மாகாணமாக ஆக்கப்படவேண்டுமெனவும் கூறினார்.
திறமைகள் இருந்தும் வறுமை நிலை, காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் அக்கரைப்பற்றில் அமையப் பெற்றுள்ள தனியார் கல்வி நிறுவனத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாகாணத்தில் அனைத்து இன மக்களும் சாந்தி, சமாதானமாக வாழ்வதற்கும் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதுடன், நிலையான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகுமெனவும் தெரிவித்த ஆளுநர், அனைத்து இன மக்களுக்கும் சமாந்திரமான சேவைகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதற்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அரச பணியை பொறுப்புடன் செயற்படுத்தவுள்ளேன் என்றார்.
இதற்காக எதிர்காலத்தில் எனது கடமைகள் அனைவருக்கும் பொதுவானதாகவும், சமத்துவமானதாகவும் எந்தவொரு அரசியல் கட்சி சார்பின்றி மற்றும் இன, மத, மொழி என்பன சாராத வகையிலும் கருமங்களை கொண்டு செல்வதற்கு முயற்சி செய்கின்றேன் என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago