எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் கொண்டவட்டுவான் பிரதான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடை வருவதாகச் சுட்டிக்காட்டிய அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் கே.என்.கரீம், இதன் காரணமாகவே குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் வரட்சியான வானிலை தொடருமாயின், நீர்த்துண்டிப்புத் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பாவனையாளர்கள், நீரை நீர் தாங்கிகளில் சேமித்து சிக்கனமாகவும் விரையமின்றியும் பாவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago