2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குடிநீர் பகுப்பாய்வு நடவடிக்கை ஆரம்பம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - நாவிதன்வெளி பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தப்படும் குடிநீரின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், கடந்த திங்கட்கிழமை (01) தொடக்கம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட மத்திய முகாம் 5 பகுதியில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 குறித்த பகுதியில் கிடைக்கப்பெறும் குடிநீரின் தன்மை, பற்றீரியா, குளோரைட் அளவு, கல்சியம் உள்ளிட்ட படிவுகள் தொடர்பான அளவீடுகள் இதன்போது பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இச்செயற்பாடானது யுனிசேப் நிறுவனத்துடன், புள்ளிவிவரவியல் திணைக்களம் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .