2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

குடும்பஸ்தரின் உயிரிழப்பில், முறையான விசாரணைகளை தேவை

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் முனைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தரின் உயிரிழப்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த சம்பவத்தினை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

முனைக்காட்டை சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் வயது (51) என்பவர் தொழிலுக்காக சம்மாந்துறைக்கு சென்றிருந்த சமயம் முதலாளியின் கவனயீனத்தால் ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையிலுள்ள குறித்த முதலாளியுடைய வயற்காணியில் குழாய்களை பதித்து கிணறு கட்டுவதற்காக காணியினுள் தோண்டப்பட்ட கிடங்கில் இறங்கி சிறியரக பாரம்தூக்கும் இயந்திரத்தில் சீமேந்து குழாய்களை சங்கிலிமூலம் தூக்க முற்பட்டவேளையில் சங்கிலி அறுந்து அவருடைய கழுத்து துண்டாகப்பட்ட நிலையில் குறித்த நபரின் உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

இச் சம்பவம் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றிருந்தபோதும், அவரது குடும்பத்தினருக்கு பிற்பகல் 4.00 மணி அளவிளேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளி தனது பக்க தவறை மறைக்கும் முகமாக குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மடு சரிந்து உயிரிழப்பு இடம்பெற்றதாக காட்டும் தோரணையில் தடயங்களை மறைக்க முற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாரம்தூக்கும் சிறியரக வாகன சாரதி, ஏனைய வேலையாட்களை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற போதிலும் குறித்த, சம்பவத்தினை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் அம்பாறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த சம்பவத்தினை சிறிய விபத்தாக காட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .