2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குப்பைகளுக்கு ”பை”

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லையினுள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையால் விசேட பைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினருடனான விசேட கலந்துரையாடல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மேயர் செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.

சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை சேகரிப்பதற்காக பச்சை நிறப் பையும் இவை தவிர, பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத கழிவுகளை வேறாக சேகரிப்பதற்காக மஞ்சள் நிறப் பையும் என்ற அடிப்படையில் இரு நிறங்களிலான பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு பைகளையும், மாநகர சபையின் பழைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் மொத்தமாக 100 ரூபாய் பணம் செலுத்தி, பொதுமக்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .