2025 மே 14, புதன்கிழமை

’குப்பைகளை அகற்றவும்’

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்சாத்

அக்கரைப்பற்று மாநகர சபையால் அள்ளப்படும் குப்பைகள், அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பெரிய மரவெட்டுவான் குளத்துக்கு அருகாமையில் கொட்டப்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தைச் சூழ, தேசிய நீர் வழங்கல் பிரதான காரியாலயம், ஸ்ரீ லங்கா ரெலிகொம், சமுர்த்தி வங்கிக் காரியாலயம், பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவளங்கள் உள்ளமையால் அங்கு கடமைபுரியும் அதிகாரிகளும் நாள்தோறும் தங்கள் பணிகளுக்காகச் செல்லும் பொதுமக்களும் பெரும் அசௌகரிகங்களுக்கு உள்ளாகின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், டெங்கு தொற்று ஏற்படும் அபாயமும் காணப்படுவதாலும் இந்தக் குப்பைகளை, அக்கரைப்பற்று மாநகர சபை அகற்றுவதோடு, தொடர்ந்தும் இங்கு குப்பைகளை கொட்டாமலிருக்கவேண்டுமென, பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X