2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குருதிப் பெருக்கினால் ஏற்படும் உயிரிழப்பு வீதம் குறைவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜூலை 08 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

  குருதிப் பெருக்கினால் ஏற்படும்   உயிரிழப்பு வீதம், கடந்த சில வருடங்களாக வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்த டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், இந்த வைத்தியசாலையை ஆரம்பித்ததிலிருந்து குருதியை பெற்றுக் கொள்ள சிரமப்பட்டோமெனவும் தெரிவித்த ,    கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், தாமாகவே  பொது மக்கள் முன்வந்து இரத்ததானம் செய்கின்றார்களெனத் தெரிவித்தார்.

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து இரத்ததான நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) மாலை வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.மேலும் உரையாற்றுகையில் :குருதி வழங்குவதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாக அது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இவ்விடயம் பற்றி மக்களுக்கு இன்னும் தெளிவூட்ட வேண்டும்.  
ஒரு காலத்தில் குருதிப் பெருக்கினால் மரணங்கள் சம்பவித்தன. ஆனால், இப்போது குருதிப் பெருக்கினால் மரணிப்பது அரிதாகி விட்டது.  
குருதிப் பெருக்கினால் அல்லது குருதி தொடர்பான நோயினால் எவரும் மரணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இரத்ததான நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X