Kogilavani / 2021 மார்ச் 19 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
குற்றச் செயல்கள் பிரதேச மட்டத்தில் தடுக்கப்படாவிடின், மாவட்ட, தேசிய மட்டங்களுக்கு எடுத்து செல்வதுடன் ஜனாதிபதியின் கவனத்துக்கும் பொதுமக்களால் கொண்டு செல்ல முடியும் என்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களினுடனான கலந்துரையாடல், பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தலைமை தாங்கி நடாத்தி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் அன்மைக்காலமாக பல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக போதைப்பொருள் விற்பனை, சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களும் அதிகமாக இடம்பெறுகின்றன என்றும் இதனால் மக்களின் வீடுகளிலும் வீதிகளிலும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்தார். .
இந்நிலையில் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதுடன் நிம்மதி இழந்தும் காணப்படுகின்றனர் என்றார்.
இதற்கு காரணமானவர்கள்; யார்? அவர்களை இனங்காணுவதற்கு சிவில்பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்புகள் எவை என்பதுத் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்றார்.
'அத்தோடு அவ்வாறானவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்த பிரதேச மட்ட பாதுகாப்புத் தரப்பினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லையாயின்; மாவட்ட மட்டத்திற்கோ அல்லது தேசிய மட்டத்திற்கோ பொதுமக்கள் அப்பிரச்சினையை கொண்டு செல்ல முடியும்' என்றார்.
இதற்கும் மேலாக இந்த நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பு விடயத்தில் அதிகக் கரிசனை செலுத்தி வரும் ஜனாதிபதி பிரதமரின் கவனத்துக்கும் பொதுமக்களால் கொண்டு சென்று தீர்வு காண முடியும் என்றார்.
இதன்போது கருத்துரைத்த பொலிஸார், பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் உடன் தங்களுக்கு அறியத்தருமாறும் அதற்கான உரிய நடவடிக்கை விரைவாக எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், சிவில்பாதுகாப்புக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

5 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
1 hours ago