ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணான வகையில் விண்ணப்பம் கோரி, குளறுபடியான முறையில் வழங்கப்பட்டுள்ள அதிபர் சேவை தரம் மூன்றுக்கான நியமனங்களால் அப்பரீட்சையில் தோற்றிய தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனரென, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மொழிமூல பாதிக்கப்பட்ட ஆசியர் சமூக ஒருங்கிணைப்பாளர் நவாஸ் சௌபீ தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு, சாந்தமருதில் நேற்று (01 ) நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கல்வியமைச்சால் வழங்கப்பட்டுள்ள 1,858 பேருக்கான அதிபர் சேவை மூன்றுக்கான நியமனங்களில், தமிழ்மொழி மூலம் 167 பேருக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியெனவும் தெரிவித்தார்.
இலங்கை முழுவதிலும் நிலவுகின்ற தமிழ் மொழி மூல வெற்றிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்கள் தகுதிபெற்றவர்கள் என நம்பியிருந்ததாகவும் ஆனால், இறுதியில் 510 பேரில் இலங்கை முழுவதுமாக 34 முஸ்லிம்களும், 133 தமிழர்களுமாக 167 பேர் மாத்திரமே தமிழ் மொழி மூலமான நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பதவி நிலை தொடர்பாக இலங்கை அதிபர் சேவை பிரமாணக்குறிப்பு மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்ற விடயம் தங்களது உரிமை மீறளை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் பேசும் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இத்திட்டமிட்ட அநீதிக்கும், புறந்தள்ளல் செயற்பாட்டுக்கும் எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட உள்ளோதோடு, மேலும் நாடு தழுவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து அரசியல் ரீதியாகவும், சட்ட நீதித்துறை ஊடாகவும் தமக்கான உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
11 minute ago
13 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
34 minute ago
1 hours ago