2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கூரையின் வழியே உள் நுழைந்து தீ வைப்பு

Editorial   / 2024 மார்ச் 16 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்   

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளிக்கிழமை  (15) இரவு வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.

வீட்டில் யாருமற்ற நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று (16) காலை வீட்டை பார்வையிட சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதை உரிமையாளர் அறிந்துள்ளார்.
சம்பவத்தினால் வீட்டின் அலுமாரியில் இருந்த பெறுமதியான ஆடைகள் மற்றும் காணி உறுதி, ஆலயம் ஒன்றின் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆலயம் ஒன்றின் பொருளாளராக இருப்பதுடன் அவரது  மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றார்.

இருப்பினும் அவர் சில நாட்களில் இரவு வேளைகளில் தனது மகளின் வீட்டில் தங்கிவருதும் வழமை. அதுபோன்றே வெள்ளிக்கிழமையும் (15)  மகளது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேநேரம் குறித்த வீட்டின் உரிமையாளர் பொருளாளராக செயற்பட்டுவரும் ஆலயம் ஒன்றின் ஒலிபெருக்கி சாதனங்களும் அண்மையில் திருடப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸாரும் வீட்டினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X