Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல், திட்ட அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ தலைமையில், அம்பாரை கச்சேரியில் நேற்று (02) நடைபெற்றது.
இதில் அம்பாறை மாவட்ட இணைப்புக் குழு தலைவர் டீ. வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கு கொண்ட ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி, கல்லோயா திட்டம் மூலம் நீரேந்து பிரதேசமாக காட்சி தரும் சம்புக்களப்பு காணி, அதன் வடிச்சல் தொடர்பாகவும் முறையான திட்டத்துடன், தில்லையாற்றுக்கு உரித்தான பிரதேசம் அடையாளம் காணப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு, வெள்ள அபாயம் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் .
இதன்மூலம், சுமார் 70 வருட கால சம்புக்களப்பு சதுப்பு நில விவசாயக் காணிகள் நிரந்தரமாக பயிர் செய்கை செய்யக் கூடிய விவசாயக் காணிகளாக மாறுவதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தில்லையாற்றின் அளவு முறையாக நிரந்தரமாக தீர்மானிக்கப்பட்டு கல்லோயா திட்டமூலம் உருவான கழிவுகளை விவசாய செய்கைக்கு பாதிப்பில்லாத வகையில் அகற்றி ஆறு செல்வதற்கான திட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு, சிறுகைத்தொழில் மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறை என்பன விருத்தி காணும். இதனால் மக்களின் வாழ்வு சிறப்பதுடன் பொருளாதாரமும் விருத்தி காணுமென்று, பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா கேட்டுக்கொண்டார்.
மேற்படி கருத்துரைகளை சபை ஏற்று அதனை சீர்செய்வதற்கான பணிகளை விரைவாக நடைமுறைப்படுததுவதாக உறுதி பூண்டது. (N)
7 hours ago
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
25 Oct 2025