Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், கர்ப்பிணித் தாய்மார்களும் சிறுவர்களும், அவசியக் காரணமின்றி, வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு வயதானவர்களும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களும், காரணமின்றி பொது இடங்களுக்கு செல்ல வேண்டாமெனவும், அறிவித்துள்ளார்.
“அடிக்கடி போதியளவு நீர் அருந்துவதோடு, போசனையுள்ள உணவுகளை உண்ண வேண்டும். காய்ச்சல், தடுமல், இருமல் ஏற்படுமாக இருந்தால் வைத்தியசாலைகளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
“கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது இலங்கையில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து நாம் எல்லோரும் பாதுக்காப்பாக இருப்பதற்கு அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
“கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரிகள் தோறும் பொது அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்.
“சுகாதாரத் திணைக்களத்தாலும், பொலிஸாராலும் மக்களின் நலன் தொடர்பாக அறிவிக்கப்படும் தெளிவூட்டல்களை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும்” என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago