2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா வைரஸுக்கான சிகிச்சை நிலையம்: ‘அச்சம் ஏற்படுகிறது’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டு நிதியைக் கொண்டு, மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்கலைக்கழகத்தை, கொரோனா வைரஸுக்கான சிகிச்சை நிலையமாக அரசு ஆக்கிரமித்திருப்பதால், அதை அண்மித்து வாழும் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “பெற்றி ​கம்பஸில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அதை இவ்வாறு கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையமாக மாற்றுவது வருந்தத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாட்டில் பல்வேறு கட்டடத் தொகுதிகள் இருக்கின்ற நிலையல், இந்தப் பல்கலைக்கழகத்தை அரசு தெரிவுசெய்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இதை அரசாங்கம் இப்படியான ஓர் இடத்தில் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு, வேறொரு இடத்தில் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவ்விறிக்கையில் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X