Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை, பெற்றி கம்பஸில் தங்கவைப்பதென்பது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு யுக்தியென, கண்டனத் தீர்மானமொன்று, காரைதீவு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இம்முயற்சியை உடனடியாக நிறுத்தவேண்டுமென்றும் இன்றேல் மக்கள் பேராட்டம் வெடிக்குமென்றும், சபை எச்சரித்தது.
காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு, சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், இன்று (10) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணை, தவிசாளரால் கொண்டுவரப்பட்டது.
சமுகமளித்திருந்த 10உறுப்பினர்களும் அதற்கு ஏகோபித்த முறையில் கருத்துகளைத் தெரிவித்து, ஆதரவளித்தனர்.
இத்தீர்மானத்தை, ஜனாதிபதி தொடக்கம் சம்பந்தப்பட்ட சகலஅதிகாரிகளுக்கும் அனுப்பவேண்டும் என்றும் பணிக்கப்பட்டது.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago