2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்     

COVID 19, 'கொரோனா வைரஸ்' சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம், இராணுவ வீரர்களும் பொலிஸாரும் தமது கடமைகளின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு, கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்றது.

கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக, பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் உட்பட இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் போது பொதுமக்களுடன் இராணுவத்தினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X