2025 மே 14, புதன்கிழமை

கொரோனாவுக்கு எதிராக யூடியூப்பில் நாட்டுக்கூத்து

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடறாஜன் ஹரன்                    

கிழக்கு மாகாணத்தில் தமிழர் பாரம்பரிய, கிராமிய கலை மூலமாக கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான விழிப்பூட்டல் பிரசாரங்கள், இளைய தலைமுறை கலைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டுக்கூத்து கலையை முன்னிறுத்தி, காரைதீவு, மண்டூர், நாவிதன்வெளி ஆகிய இடங்களை சேர்ந்த இளையோர்களின் கூட்டு முயற்சியாக “இல்லறச்சிறையில்” என்கிற காணொளி, இன்று (27) நள்ளிரவு 12 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.

ஜனாதிபதி விருது வென்ற காரைதீவைச் சேர்ந்த நாட்டுக்கூத்து கலைஞர் குணசேகரம் சுரேஸ்குமார், இந்தியாவின் தமிழ்நாட்டு அறிஞர்களால் கவி வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட காரைதீவை சேர்ந்த கவிஞர் காரையன் கதன், மண்டூரை சேர்ந்த இசையமைப்பாளர் பாடகர் டினேஸ் திரு சந்தானா, நாவிதன்வெளியை சேர்ந்த நாட்டிய தாரகை பிரணிதா தேவகுமார் உள்ளிட்ட கலைஞர்கள் அவரவர் துறை சார்ந்த பங்களிப்புகளை இதற்கு வழங்கி உள்ளனர்.

இப்படைப்பு மக்களின் மனங்களை தொட்டு, நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதுடன், இந்தக் கொடிய நோயில் இருந்து மக்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்று, காரையன் கதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X