2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கொலை தொடர்பில் 18 வயது இளைஞன் கைது

Freelancer   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - வாங்காமம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஐவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாங்காமத்தை சேர்ந்த ஆட்டுப் பண்ணை ஒன்றின் உரிமையாளரே கடந்த வௌ்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டிருந்தார். 

ஆட்டுப் பண்ணையை பராமரித்து வந்த அக்கரைப்பற்று காந்தி வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று(24) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆட்டுப் பண்ணை உரிமையாளருடன் இடம்பெற்ற முரண்பாட்டை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X