Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 18 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்புக்குச் சென்று சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாமல் பரிதவித்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர். மீள அழைத்து வரப்பட்டனர்.
அம்பாறை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, அன்னமலை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த இவர்களை மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் மேற்கொண்டிருந்தார்.
இதனடிப்படையில், நேற்று (17) மாலை தனியார் பஸ் மூலமாக கொழும்பில் இருந்து அழைத்து வந்த அவர், கல்முனை பொலிஸ் நிலையத்தில் மேற்படி 12 பேரையும் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் எம்.பி வியாளேந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,
“கொழும்பில் நிர்க்கதியான குறித்த 12 பேரும், பேஸ்புக் நண்பர்கள் வாயிலான விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு, சமூக சேவகர்களான வைத்தியர் ஆதர்சன் சிவதர்சன், நடராசா பிரசாந் ஆகியோர் என்னை தொடர்புகொண்டு நிர்க்கதியான மக்களை சொந்த இடத்துக்கு அழைத்துவர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டனர்.
“அதன் பிரகாரம், இந்த அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு உதவும் வகையில், மேற்கூறிய சமூக சேவகர்களின் கோரிக்கையை இணங்கவே, இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.
“இதனை கேள்வியுற்ற நிர்க்கதியானவர்கள் இவர்களின் ஊடாக என்னை தொடர்பு ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். இவ்வாறு, கொழும்பில் வேலைக்காக சென்று நிர்க்கதியானவர்கள் தொடர்பாக 10 ஆம் கட்ட நடவடிக்கை ஊடாக இவர்களை மீட்டுள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago