Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விதைந்துரைக்கப்பட்டுள்ள “செழிப்பும், அற்புதமும் நிறைந்த நாடு” எனும் கோட்பாடு, எதிர்வரும் நாள்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் ஏற்பாட்டில், “வியாபார மனிதாபிமானத்தினூடாக நிலைபேறான தன்மையும், தொழிநுட்பமும்” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நேற்று (25) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற இச்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டினுடைய தேசிய பொருளாதாரத்தையும், பல்லின சமூகக் கோட்பாடுகளையும் கட்டியெழுப்பும் வகையில், இந்நாட்டில் உள்ள இளைஞர்களையும், சிறிய நடுத்தர முயற்சியளர்களையும், ஊக்குவிக்க வேண்டிய தேவை எம்முள்ளே எழுகின்றது.
“நீடித்து நிலைக்கும் தன்மை பற்றி இந்த ஆய்வு மாநாட்டில் கலந்துரையாடவுள்ளோம். நிலைபேறான அபிவிருத்தியின் குறிக்கோள்கள் பற்றி கலந்துரையாடி, தேசிய மட்டத்தில் எல்லா இடங்களிலும் இக்கருப்பொருள் தொடர்பில் பரவலாக பேசப்படுகின்றது.
“மக்கள் அவர்களுடைய திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தி வியாபாரக் கருவிகளையும், நுட்பங்களையும் பயன்படுத்தி அதனூடாக சிறந்த சாதனையாளர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்தை அடிப்படையாக வைத்து, 17 வகையான நிலைபேறான அபிவிருத்திகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்த ஆய்வு மாநாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago