Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸிறாஜ் இஸ்ஸதீன்
சுயநல அரசியல் நோக்கத்துக்காக ஆசைப்பட்டு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை ஆதரிக்கவில்லையெனத் தெரிவித்த தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, இனப்பாகுபாடின்றி அனைவரும் வாழவேண்டுமெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் புதன்கிழமை (23) மாலை அக்கரைப்பற்று கிழக்கு வாசல் வெளியரங்கில் நடைபெற்றது. கட்சியின் உயர்பீட ,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா உரையாற்றுகையில்:
சிங்களவர், தமிழர், முஸ்லிம், பரங்கியர் என்ற இனப்பாகுபாடின்றி அனைத்தின மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட மேலும் எதிர்கொள்ளுகின்ற
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும். பாதுகாப்பான நாடொன்றைக் கட்டியெழுப்பி அனைத்தின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்காக முன்வந்தோமே தவிர, எம்மிடம் சுயநல நோக்கம் எதுவுமில்லை என்றார்.
இன்று வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளனர். அதேபோல் பெரும்பான்மை மக்களில் கணிசமானோர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago