2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கோமாரி செல்வபுரம் கிராமத்தில் புதிய பாடசாலை

எஸ்.கார்த்திகேசு   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட கோமாரி செல்வபுரம் கிராமத்தில், “துளசி வித்தியாலயம்” எனும் பெயரில் புதிய ஆரம்ப பாடசாலை, நாளை (25) திறக்கப்படவுள்ளது.

இந்தப் புதிய பாடசாலை திறப்பு விழா, திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு வைபவ ரீதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

கோமாரி செல்வபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 3 அல்லது 4  கிலோமிற்றர் தூரம் சிறுவர்கள் ஆரம்ப கல்விக்காக கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் இன்றி மிகவும் சிரமத்தக்கு மத்தியில் நடந்து சென்றே ஆரம்ப கல்வியை பயின்று வரவேணடிய சூழ்நிலைகள் காணப்பட்டன.

இந்நிலைமைகளை கருத்தில்கொண்டு, செல்வபுரம் கிராம பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் ஆகியோர் எடுத்த முயற்சின் பயனாக, இந்தப் பாடசாலை, தற்காலிக அரச கட்டடமொன்றில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

பாடசாலைக்கான நிரந்தரக் கட்டடம் நிர்மாணிப்பதற்காக இரண்டு ஏக்கர் காணியும் பிரதேச செயலாளரால் அடையாளப்படுத்தபப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக பொத்துவில் முகுதுமகா விகாராதிபதி வண.வறக்காப்பொல இந்திரசிறி தேரர் கோமாரி செல்வ விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ இ.சுமனசர்மா தேவகிராமம் அருட்தந்தை சூசைநாயகம் அடிகளார் ஆகியோரும் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கெரவ அதிதியாக பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் பொத்துவில் (தமிழ்) கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.கங்காதரன் இராணுவ அதிகாரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதவி தவிசாளர் பி.பார்த்திபன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X