எஸ்.கார்த்திகேசு / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மணல்சேனைப் கிராமத்தில், காட்டு யானைகள் புகுந்து தென்னை, பப்பாசி, வாழை, கற்றாளை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளதாக, தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
காட்டு யானைகள், நேற்று இரவு கிராமத்துக்குள் புகுந்து, அங்கு பயிரடப்பட்டிருந்த மேற்படி பயன்தரும் மரங்களை நாசம் செய்துள்ளதுடன், தமக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
காட்டு யானைகள் தொடர்ந்தும் இவ்வாறு தோட்டங்களுக்கு இரவு வேளைகளில் புகுந்து, வாழ்வாதாரப் பயிர்களை நாசம் செய்து வருவதன் காரணமாக, தாம் பொருளாதார ரீதியாக பாதிப்புக்களை அடைந்துள்ளதுடன், மன ரீதியாகவும் சோர்வடைந்து இருப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
38 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago