Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி கோழி இறைச்சியைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 05 வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ், இன்று (21) தெரிவித்தார்.
அத்துடன், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி தோலுடன் 430 ரூபாயாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 500 ரூபாயாகவும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் ஜுன் மாதம் 01ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 60 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் என்.எம். சப்றாஸ் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago