2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோவில் உற்சவங்களுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

கோவில் உற்சவங்களை, சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்புடையதாய் மேற்கொள்வதற்கு அனுமதிகளை வழங்குமாறு, அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டு மக்களின் ஆன்மீக ரீதியிலான வழிபாடுகளுக்கு கோவில் உற்சவங்களை சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்வதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் ஆதீனப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண. இராஜரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இனிவருகின்ற மாதங்கள் உற்சவக் காலங்கள் என்றபடியால், இந்துகள் வருடம் தோரும் நிறைவேற்றி வருகின்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்புடைய வகையில், மட்டுப்படுத்தப்பட்ட வகையில், கோவில்களின் உற்சவங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமெனக் கோரினார்.

இந்த அனுமதியை, பிரதேச ரீதியான சுகாதார நிர்வாக, முப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி, மதக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் செயல் முறை ரீதியாக அமுல்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.

கோவில் நிர்வாகிகளுக்கு, இந்து சமய கலாசாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கி, பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளின் ஊடாக உற்சவங்களை நடத்துவதற்கான அனுமதிகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X